ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 16 பேருக்கு கொரோனா
In இலங்கை December 28, 2020 4:46 am GMT 0 Comments 1412 by : Yuganthini
நுவரெலியா- வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகின. இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பகமுவ, கினிகத்தேனை, பலன்தொட, வட்டவளை, டெம்பல்ஸ்டோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.