ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு: 19 பேர் இத்தாலிய பொலிஸாரால் கைது
In இத்தாலி December 6, 2020 6:35 am GMT 0 Comments 1954 by : Jeyachandran Vithushan

ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 19 பேரை இத்தாலிய பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறியவர்களையும் பின்னர் வடக்கு ஐரோப்பாவிற்கும் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஈராக்கிய குர்துகள், ஆப்கானியர்கள் மற்றும் இத்தாலியர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் கடத்தல்காரர்களுடன் சந்தேக நபர்களை தொடர்புபடுத்திய இரண்டு ஆண்டு விசாரணையைத் தொடர்ந்து இந்த வலையமைப்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
துருக்கி மற்றும் கிரீஸ் வழியாக புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாடகை அல்லது திருடப்பட்ட பாடுகளின் படகோட்டிகளை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.