ஆனைவிழுந்தான் பகுதியில் வயல் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை
In இலங்கை April 11, 2019 10:01 am GMT 0 Comments 1916 by : Dhackshala
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பகுதியில் மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட வயல் காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இவ்விடயம் குறித்து எதிர்வரும் வாரத்தில் அப்பகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனைவிழுந்தான் பகுதியில் 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வயல் காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும், இன்றுவரை குறித்த காணி வழங்கப்படவில்லை எனவும் இக்கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை, சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை
-
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது எ
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையி
-
அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அ
-
பிரித்தானியாவில் 3.6 மில்லையனுக்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீப
-
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப
-
வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு க
-
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றம
-
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவ
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாத