ஆதிசநல்லூரின் பெருமைச் சொல்லும் ஆய்வு முடிவுகள்!

தமிழகத்தின் ஆதிசநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கார்பன் பரிசோதனை அறிக்கைகள் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆதிசநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை அமெரிக்காவிலுள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த பரிசோதனையின் முடிவில் ஒரு பொருள் கி.மு. 905 ஆண்டுக்குரியதெனவும் மற்றொன்று கி.மு. 791ஆம் ஆண்டுக்குரியதெனவும் தெரியவந்துள்ளது.
ஆதிசநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோமீட்டர் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
இது உலக அளவில் பலமுறை அகழ்வுகளும் ஆய்வுகளும் செய்யப்பட்ட நகரங்களில் ஒன்று எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-இல் இங்கு அகழ்வுப் பணிகளைத் தொடங்கியதுடன், ஜேர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-இல் இங்கு இனப்பகுப்பாய்வு தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாக
-
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதி
-
புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் எ
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ