ஆந்திராவில் மர்ம நோய்: 292 பேருக்கு திடீரென உடல்நல பாதிப்பு- ஒருவர் உயிரிழப்பு

ஆந்திராவின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 292 பேர் வரை மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 140 பேர் வீடு திரும்பியுள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்து நிபுணர் குழுவினர் எலுரு பகுதியில் முகாமிட்டுள்ளதுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் அல நானி, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யாருக்கும் கொரோனோ தொற்று இல்லை எனவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லையன்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எலுரு பகுதியில் குடிநீரில் இரசாயன வேதிப்பொருள் நிறைந்த மாசுபட்ட நீர் கலந்திருக்கலாம் எனவும் அதனைக் குடித்ததால்தான் மக்களுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்பாடிருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவ்விவகாரம் குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.