ஆந்திர பிரதேசத்தில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இடம்பெற்றது!
In இந்தியா April 12, 2019 3:41 am GMT 0 Comments 1942 by : adminsrilanka

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில இடங்களில் நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்திருந்தது.
17ஆவது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில், குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.
மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் என 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடைபெற்றது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை நடைபெற்ற போதிலும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம