ஆப்கானிய போரின் போது 39பேரை சட்டவிரோதமாக கொன்ற அவுஸ்ரேலிய படை வீரர்கள்: ஆதாரம் சிக்கியது!
In அவுஸ்ரேலியா November 19, 2020 12:20 pm GMT 0 Comments 1684 by : Anojkiyan

ஆப்கானிய போரின் போது அவுஸ்ரேலிய உயர் பாதுகாப்பு படை வீரர்கள் 39 பேரை சட்டவிரோதமாக கொன்றனர் என்பதற்கு ‘நம்பகமான சான்றுகள்’ உள்ளன என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது.
அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை (ஏ.டி.எஃப்) தனது படைகளின் தவறான நடத்தை குறித்த நான்கு ஆண்டு விசாரணையின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
2009ஆம் மற்றும் 2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ‘கைதிகள், விவசாயிகள் அல்லது பொதுமக்கள்’ கொல்லப்பட்ட வழக்குகள் தொடர்பாக 19 தற்போதைய அல்லது முன்னாள் வீரர்களை பொலிஸார் விசாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
சில வீரர்களிடையே சரிபார்க்கப்படாத ‘போர்வீரர் கலாச்சாரம்’ இருந்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜஸ்டிஸ் பால் ப்ரெட்டன் நடத்திய விசாரணை, 400க்கும் மேற்பட்ட சாட்சிகளுடன் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளம் படையினர் கைதிகளை சுட்டுக் கொல்வதன் மூலம் முதல் கொலை செய்யும்படி பணிக்கப்பட்டனர். இது ‘இரத்தப்போக்கு’ என்று அழைக்கப்படுகிறது.
குற்றங்களை மறைக்க ஆப்கானிய உடல்களுக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், அவுஸ்ரேலியா ‘நீதியை உறுதி செய்வதில்’ உறுதியாக இருப்பதாக உறுதியளித்தது.
23 தனித்தனியான சம்பவங்களில் 25 சிறப்புப் படை வீரர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ சட்டவிரோத கொலைகளில் பங்கேற்றுள்ளனர்.
‘குற்றவாளியின் நோக்கம் தெளிவாகவோ, குழப்பமாகவோ அல்லது தவறாகவோ இருந்த சூழ்நிலைகளில் எதுவும் நிகழ்ந்ததாகக் கூறப்படவில்லை’ என ஏடிஎஃப் தலைவர் ஜெனரல் அங்கஸ் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.