ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு: ஐவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மூன்று வெவ்வேறு குண்டு வெடிப்புக்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
முதலிரண்டு வெடிப்புக்கள் 15 நிமிடங்கள் இடைவெளியில் நடந்ததாகவும், மூன்றாவது வெடிப்பு பொலிஸ் வாகனத்தைக் குறிவைத்து இரண்டு மணிநேரம் கழித்து இடம்பெற்றதாகவும் காபூல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டு வெடிப்புக்களில், தேசிய இராணுவ வீரர்கள் இருவரும், இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில், கட்டாரில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் வன்முறைகள் நாடு தழுவிய அளவில் அதிகரித்துள்ளன.
எனினும், இவ்வாறான தாக்குதல்களுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) குழுவின் உள்ளூர் துணைக் குழுக்கள் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.