ஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்!
In விளையாட்டு April 10, 2019 7:35 am GMT 0 Comments 1963 by : Anojkiyan
இவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்பி பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு, இவ்வுலகில் இரசிகர்கள பல கோடி…
இவ்வாறு புகழ் புத்த பர்முயுலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.
இதில் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வர்.
இப்பந்தயத்தில் ஆண்டு இறுதியில் யார் அதிக சுற்றுக்களில் வெற்றிபெற்று, அதிக புள்ளிகளை பெறுகிறாரோ அவரே சம்பியனாக தெரிவுசெய்யப்படுவர்.
இதையும் தாண்டி, குறித்த புகழ் பூத்த பர்முயுலா-1 கார்பந்தயம், பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது.
ஆரம்ப கால கட்டங்களில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடர், தற்போது ஆசிய நாடுகளிலும் காலுண்ட தொடங்கியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வியட்நாமிலும் பர்முயுலா-1 கார்பந்தய தொடர் நடைபெறவுள்ளது.
இந்த அற்புதமான விளையாட்டை இன்றும் நேசிக்கும் இரசிகர்கள் பலரும் உள்ளனர். ஆனால் இந்த கார்பந்தயத்தில் பங்கேற்பதற்கு அதிக அனுபவம், அதிக பயிற்சிகள், நுணுக்கங்கள் என ஏராளமான தகமைகள் வேண்டும்.
இந்த நிலையில், உலகத் தரம்வாய்ந்த கார்பந்தய தொடரான பர்முயுலா-1 கார்பந்தயம், ஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை நிறைவு செய்யும் கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள ஆண்டின் மூன்றாவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ், சுற்றின் போது, ஆயிரமாவது கார் பந்தய போட்டி நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு மிக்க பந்தயத் தொடரை கொண்டாட, பர்முயுலா-1 கார்பந்தய நிர்வாகம் மட்டுமல்ல இரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இருபதாவது நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்த பர்முயுலா-1 கார்பந்தயம், இதுவரை பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக முன்னாள் வீரரான ஜேர்மனியின் மைக்கல் ஷூமேக்கர் , பர்முயுலா-1 கார்பந்தயத்தில், 7 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற மகத்தான வீரர் ஆவார்.
அதேபோல, பிரித்தானியாவின் லீவிஸ் ஹெமில்டன் ஐந்தாவது முறை உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அவரோடு முன்னாள் வீரரான அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவும் ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இவ்வாறு பல வீரர்களை பர்முயுலா-1 கார்பந்தயம், உருவாக்கியுள்ளது. இதேவேளை இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு முக்கியமானதொரு நபரையும் நினைவுக்கூர வேண்டியுள்ளது.
பர்முயுலா-1 கார்பந்தய விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் சென்றதில் சார்லி வைட்டிங்கு முக்கிய பங்கு உள்ளது.
பர்முயுலா-1 நிர்வாக அமைப்பின் தலைவராக இருந்த பிரித்தானியாவின் சார்லி வைட்டிங், கடந்த 1988ஆம் ஆண்டு பார்முலா 1 நிர்வாகக் குழுவில் தொழில்நுட்ப இயக்குனராக இணைந்து, பர்முயுலா-1 கார்பந்தய தொடரில் பல மாற்றங்களை கொண்டுவந்தார் ஆவார். குறிப்பாக இந்தப் பந்தயங்களின் பல விதிமுறைகளை வடிவமைத்தவரும் அவரே.
ஆனால் அவர், கடந்த மார்ச் மாதம் தனது 66ஆவது வயதில் மரணமடைந்தார். ஆனால் பர்முயுலா-1 கார்பந்தய விளையாட்டில் அவரது பங்கு அளப்பரியது.
கடந்த 1950ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பர்முயுலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும் பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது.
குறிப்பாக கார்களின் வடிவமைப்பு, வேகம், வீரர்களின் எண்ணிக்கை, போட்டி நியதி, ஓடுதளம், பந்தய தூரம் என பல விடயங்கள் அடங்கும்.
தற்போது நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தய தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்;டு சுற்றிகளின் அடிப்படையில், வால்டெரி போட்டாஸ் 44 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லீவிஸ் ஹெமில்டன் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இத்தொடரின் மூன்றாவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 14ஆம் திகதி, சன்காய் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.