ஆயிரம் ரூபாயின் பெறுமதி குறையும் வரையில் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை – மனோ
In இலங்கை January 19, 2021 7:47 am GMT 0 Comments 1413 by : Dhackshala
1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படாது என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தோட்டத்தொழிலாளர் தொடர்பில், அவர்களது நாட்சம்பளம் பற்றிய கோஷம்தான் கடந்த பல்லாண்டுகளாக எப்போதும் உரக்கக் கேட்டது.
இன்றைய தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அல்லது 1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் கூட்டொப்பந்த முறைமையின் கீழ் வழங்கப்படாது என நாம் கணித்திருந்தோம்.
ஆகவேதான், தோட்டத்தொழிலாளர்களுக்கு சொத்தமாகவோ, நீண்ட குத்தகைக்கோ காணி பிரித்தளிக்கபட்டு அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்-கிராமவாசிகளாக மாற்றப்படுவதே நிரந்தர தீர்வு எனவும் கணித்திருத்தோம்.
தொழிலாளர்களுக்கு தோட்டக்காணி பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று பலர் பலகாலமாய் கூறி வந்தாலும் அதை அரசியல் கோஷமாக்கி 2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி ஆவணப்படுத்தியது, தமிழ் முற்போக்கு கூட்டணியே.
இன்று இந்த கோஷம் அனைத்து தரப்புகளாலும் முன் வைக்கப்படுவது, முற்போக்கான வளர்ச்சியாகும்.
ஆனால், இந்த காணி பிரித்து அல்லது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படுவது என்பதும் வெளிவாரி உற்பத்தி என்று கம்பனிகள் தொழிலாளருக்கு ‘கண்ட்ராக்ட்’ வழங்குவது என்பதும் இரு வேறு விடயங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை இதுவாகும்” என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.