ஆயுதமுனையில் விமான ஓடுபாதையில் கொள்ளை!

அல்பேனிய விமான நிலைய ஓடுபாதைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் விமானத்தில் ஏற்றப்படவிருந்த 2.8 மில்லியன் டொலர் பணத்தினை கொள்ளையிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வாகனத்தைத் திருடி, அதில் வருமான வரித்துறையின் சின்னத்தை ஒட்டி, ராணுவ அதிகாரிகள் போல் வேடமிட்ட கொள்ளையர்கள் விமான நிலைய ஓடுபாதைக்குள் நுழைந்து கொள்ளையிட்டுள்ளனர்.
இதன்போது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்பேனிய மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே, அல்பேனியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், அவற்றின் பணத்தினை வியன்னாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றன.
இந்தநிலையிலேயே வியன்னாவுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு அரசடி கிராமசேவகர் பிரிவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிம
-
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர். அதன்படி
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கடுமையான கட்டுப்பாடுக
-
முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று கு
-
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை