ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாதி காத்தான்குடியில் கைது!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த 38 வயதான அப்துல் கபூர் முகமது றிஸ்வின் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்கோடரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவ
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலைய
-
முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்
-
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட
-
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்
-
கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங
-
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப
-
பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர