இங்கிலாந்தில் அனைத்துப் பாடசாலைகளையும் திறக்க திட்டம்!
In இங்கிலாந்து February 23, 2021 7:04 am GMT 0 Comments 1332 by : Anojkiyan

இங்கிலாந்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளும் திறக்கப்படும் என்பதை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய அந்த வாரத்தில் படிப்படியாக பாடசாலைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
மேல்நிலைப் பாடசாலைகளில் வெகுஜன கொவிட் சோதனை இருக்கும். பாடசாலையில் மூன்று சோதனைகளுக்குப் பிறகு, வீட்டிலேயே சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம்நிலை மாணவர்களுக்கான வீட்டு சோதனை வாரத்திற்கு இரண்டு முறை இருக்கும். சில மேல்நிலைப் பாடசாலை வகுப்பறைகளிலும் முகக்கவசங்கள் தேவைப்படும்.
பாடசாலைகள் திரும்பிச் செல்லும்போது வருகை கட்டாயமாக இருக்கும். பாடசாலைகளுக்கு வருகை தராவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.