இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!
In இங்கிலாந்து November 30, 2020 7:40 am GMT 0 Comments 1907 by : Anojkiyan

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி, குறைந்தபட்சம் அடுத்த கோடை வரை தடுப்பூசி விநியோகத்தை மேற்பார்வையிடுவார்.
சுகாதார செயலாளர் மாற் ஹான்காக், இந்த நியமனம் குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். ஒரு டுவீட்டில் ‘ஒரு மகத்தான பணி முன்னால் உள்ளது’ என்று கூறினார்.
இடைக்கால ஏற்பாட்டின் கீழ், ஜஹாவி தற்போது பணிபுரியும் சுகாதாரத் துறை மற்றும் வணிகத் துறை இடையே கூட்டு அமைச்சராக பணியாற்றுவார். அவரது முதன்மை கவனம் தடுப்பூசியை வழங்குவதில் இருக்கும்.
அஸ்ட்ராஜெனெகா என்கிற மருந்து நிறுவனமும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த தடுப்பூசி சராசரியாக 70 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.