இங்கிலாந்தில் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம்!
In இங்கிலாந்து April 9, 2019 7:15 am GMT 0 Comments 2865 by : Varshini

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்பதியருள் ஒருவர், மற்றையவரின் நடத்தை மற்றும் பிறசெயற்பாடுகள் பிடிக்காவிட்டால் விவாகரத்து வழக்குத்தொடரும் வகையில் தற்போதைய சட்டம் அமைந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில், திருமணம் முற்றிலும் தோல்வியடைந்தால் மாத்திரமே விவாகரத்துக்கோரி வழக்குத்தொடரும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
அத்தோடு, ஒருவர் விவாகரத்தை மறுக்கும்போது மற்றையவர் வழக்குத்தொடரும் நிலையும் நிறுத்தப்படும் என நீதித்துறை செயலாளர் டேவிட் கோக் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்திற்கு கணவன் உடன்படாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனைவி தொடர்ந்த வழக்கொன்று நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே, விவாகரத்து சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், விவாகரத்து வழங்கப்படுவதற்கு முன்னர் ஆறுமாதங்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர் விவாகரத்து அவசியம் என்பதை தம்பதியர் அறிவித்தால் மாத்திரமே விவாகரத்து வழங்கப்படும்.
கணவன் மனைவியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட அல்லது சிந்திக்கவே இந்தக் காலஅவகாசம் வழங்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், கணவனும் மனைவியும் இணைந்து விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.