இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், இருபதுக்கு 20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya (VC), KL Rahul, Hardik, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj, Shardul Thakur ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய தொடரில் சிறப்பாக செயற்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.