இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை!
In இங்கிலாந்து February 2, 2021 5:24 am GMT 0 Comments 1680 by : Anojkiyan

இங்கிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்திற்கு, கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெட்வெதர்.டி.வி விளக்கப்படங்களின்படி, வியாழக்கிழமை வரை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பனியின் ஆபத்து நிலை 90 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.
ஒரே இரவில் பனிப்பொழிவு ஏற்படும் ஆபத்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வடக்கில் 90 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.
பனியின் அச்சுறுத்தல் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து ஸ்கொட்லாந்தின் வெகு தொலைவில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது
கிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும், வாகன ஓட்டுனர்கள் மோசமான சூழல் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம், ரயில் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இங்கிலாந்தைப் பொருத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.