இடைதேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் பேச்சுவார்த்தை
In இந்தியா April 20, 2019 9:14 am GMT 0 Comments 2069 by : Yuganthini
தமிழகத்தில், இடைதேர்தல் நடைபெறவுள்ள மேலும் நான்கு தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் சூலூர், அரவங்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் ஆயத்த பணிகள் குறித்தே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், ஆகிய தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
அதற்கமைய, திருப்பரங்குன்றம் தொகுதிக்காக பெரியசாமியும், ஒட்டபிடாரம் தொகுதிக்காக நேரு ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் இன்று காலை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பொன்மொழியும், சூலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் வேலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருடனும் தி.மு.கவின் உயர்மட்ட தலைவர்கள் இன்று கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த நான்கு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தி.மு.க ஏற்கனவே அறித்துள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
18 சட்டமன்றங்களுக்கான இடைத் தேர்தல் கடந்த 18 ஆம் திகதி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்தே சூலூர், அரவங்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம், ஆகிய தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.