இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில்!
In இங்கிலாந்து November 18, 2020 4:38 am GMT 0 Comments 1997 by : Jeyachandran Vithushan

கட்சியில் யூத எதிர்ப்புக்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் மீண்டும் எதிர்க்கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு அவரது தலைமையின் கீழான கட்சி பொறுப்பு என சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒக்டோபர் இறுதியில் கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கோர்பின் தலைமையின் போது யூத-விரோத குற்றச்சாட்டுகளால் தொழிற்கட்சி பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து கோர்பின் பதவி விலகினார்.
இருப்பினும் குறித்த பிரச்சினையின் அளவு அரசியல் காரணங்களுக்காக கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும், எதிர்தரப்பினர் மற்றும் பெரும்பாலான ஊடகங்களாலும் மிகைப்படுத்தப்பட்டது என ஜெர்மி கோர்பின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு தெரிவித்து சில மணிநேரங்களில் அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.