யாழ். இளைஞர்களின் புதிய முயற்சி: சூம் செயலியில் அரங்கேறவுள்ளது ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம்!
In இலங்கை January 11, 2021 9:37 am GMT 0 Comments 1532 by : Yuganthini

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காலப்பகுதியில் பலதுறைகளும் பாதிக்கப்பட்டது போன்று நாடகத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்லில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியைப் பயன்படுத்தும் எண்ணம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கின்ற சூழலில் தமிழ் நாடகங்களையும் நிகழ்த்த முடியாதுள்ளது.
அந்தவகையில், நாடக உலகில் முதன்முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்தவுள்ளது.
அதன்படி, ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் சூம் செயலிவழியாக அரங்கேற்றப்படவுள்ளது. நகைச்சுவைப் பாங்கான இந்த நாடகம் நாளை (செவ்வாய்கிழமை) இரவு ஏழு மணிக்கு சூம் செயலி ஊடாக (Zoom ID: 857 1051 6422, Passcode: 2021) பார்வையிட முடியும்.
செயல்திறன் அரங்க இயக்குநர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில், த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.