இத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை
In இத்தாலி January 27, 2021 9:46 am GMT 0 Comments 1650 by : Jeyachandran Vithushan

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்டின் தொற்று மீட்பு நிதிகளின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளன.
பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான முதல் வரைவுக்கு இத்தாலியின் தேசிய நாடாளுமன்றம் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ள போதும் திட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுவது மிக முக்கியம் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் அந்நாட்டு ஊடகம் ஒன்றின் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இந்த பணி தொடரும் என்று தங்கள் எதிர்பார்ப்பதாகவும் எப்படியிருந்தாலும், இத்தாலி இதுவரை மீட்பு நிதியைப் பெறுபவர்களாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகவே ஆயத்த பணிகள் நடைபெறுவதையும், இத்தாலி தொற்று மீட்பு நிதிகளை பெறத் தொடங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.