இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
In இலங்கை February 22, 2021 10:02 am GMT 0 Comments 1202 by : Yuganthini

இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியில் மிலான் மற்றும் ரோம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது கொட்டாவ பகுதியைச் சேந்த 57 வயதுடையவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் எனவும் அதேபோன்று காலி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவரும், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும், 20 வருடங்களுக்கும் மேல் இத்தாலியில் தமது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.