இந்தவாரம் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியமானதாக அமையும்: பார்னியர்
In இங்கிலாந்து April 29, 2019 1:14 pm GMT 0 Comments 3437 by : shiyani

பிரித்தானியாவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் தெரியவரலாம் என்ற காரணத்தால் இந்தவாரம் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியமானதாக அமையுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்ஸிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பார்னியர் கூறியதாவது;
இருகட்சிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்தது அல்ல. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிற் உடன்படிக்கையை சாத்தியமானது.
இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட முடியாது. இந்த விடயம் பிரதமர் தெரேசா மே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் ஆகிய இருவருக்குமே தெரியும்.
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான எதிர்கால உறவை வரையறுக்கும் அரசியல் பிரகடனத்தை மாத்திரமே பேச்சுவார்த்தைகளின் மூலமாக மேம்படுத்த முடியும்.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் உடன்படிக்கை எதுவும் எட்டப்படாவிட்டால் பிரித்தானியா தேர்தலில் நிச்சயமாக பங்கெடுக்க வேண்டும் எனவும் பார்னியர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.