இந்தியத்துணைத்தூதுவர் வவுனியாவிற்கு விஐயம்!
In இலங்கை February 10, 2021 8:54 am GMT 0 Comments 1247 by : Vithushagan

இந்தியத்துணைத்தூதுவர் வவுனியாவிற்கு விஐயம் பல்வேறு தரப்புகளுடனும் சந்திப்பு கடந்த 4ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் செய்த யாழ்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார்.
அந்தவகையில் புளியங்குளம் புதூர்ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாடு செய்தபின்னர், ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கிராமப் பெரியவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் பூவரசங்குளம் மகாவித்தியா லயம் ஆகிய இடங்களில் இந்திய அரசின் மானிய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வகுப்பறைக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார். தனது வரு கையை முன்னிட்டு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மரக்கன்று நட்டார்.
இந்தியமத்திய அரசின் மானிய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாதிரிக்கிராமத் திட்டத்தின் கீழ், வவுனியா மெனிக்பாமிலுள்ள அருணோதயம் நகரில் இடம்பெறும் வீட்டுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர், பயனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.