இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்டது ருவிற்றர் நிறுவனம்!

இந்தியாவின் பகுதியாகவுள்ள லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல் தவறாக குறிப்பிட்டதற்காக டுவிற்றர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுகுறித்து, ருவிற்றர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்த நிலையில் இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளதாக தரவுப் பாதுகாப்பு வரைபுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிற்றர் நிறுவனம் தங்களிடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ருவிற்றர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.