இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாதிப்பு – நாசா
In இந்தியா April 2, 2019 7:16 am GMT 0 Comments 2546 by : adminsrilanka

இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனையின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பாதிக்கக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயற்படுத்தியள்ளது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், “செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக இந்திய பிரதமர் மோடியின் அறிக்கையை தாங்கள் பார்த்துள்ளோம்.
அந்தவகையில், விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும். அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது” என கூறியுள்ளார்.
ஏவுகணை சோதனையின்போது இந்தியா சுட்டுவீழ்த்திய செயற்கைகோள் 400 துண்டுகளாக உடைந்து விண்வெளியில் மிதக்கின்றது. அவற்றில் 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ அளவு கொண்டவையாகும். அவற்றில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வட்ட பாதையில் மிதக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதநேரம் அவை மிக மிக ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் இதுவரை 23 ஆயிரம் பொருட்கள் 10.செ.மீ அளவில் மிதந்து கொண்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்துள்ளது. அதில் 10 ஆயிரம் துண்டுகள் செயற்கைகோளின் துண்டுகளாகும். இவற்றில் 3 ஆயிரம் துண்டுகள் மட்டும் கடந்த 2007ஆம் ஆண்டு சீனா நடத்திய செயற்கைகோள் எதிர்ப்பு சோதனையின்போது உருவானவையாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.