இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொண்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

இந்தியாவில் முற்றிலும் கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ ஃபிரிகேற் (17A FRIGATE) ஏவுகணை தாங்கிக் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில், முப்படைத் தலைமைத் தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் கப்பலை வழங்கிவைத்தார்.
இந்திய மதிப்பில் 19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் மூன்று ஃபிரிகேற் கப்பல்களைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
நவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் கப்பல் வான், கடல் மற்றும் ஆழ்கடலில் இருந்து வரும் முக்கோண அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் திறன் வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் சென்சர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் ஒப்படைப்பு நிகழ்வில் உரையாற்றிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், குறித்த ஏவுகணை தாங்கிக் கப்பல்களை கடற்படையுடன் இணைத்தால், கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு தன்னிறைவை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.