இந்தியாவில் முதன் முறையாக தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி!
In இந்தியா February 18, 2021 5:33 am GMT 0 Comments 1264 by : Krushnamoorthy Dushanthini

இந்தியா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றப்பின் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணே மேற்படி தூக்கிலிடப்படவுள்ளார்.
குறித்த பெண் கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் சலீம் என்பருடன் சேர்ந்து தனது பெற்றோர் உட்பட ஏழு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 இலும், உச்சநீதிமன்றம் 2015 இலும் உறுதி செய்துள்ளன.
இதனையடுத்து குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதனையடுத்து ஷ்பனத்துக்கு மேற்படி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இந்த அறை 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் பெண் குற்றவாளி யாரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.