இந்தியா உட்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் போர்ப் பயிற்சி மீண்டும் ஆரம்பமாகிறது

இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் போர்ப் பயிற்சி நாளை ஆரம்பமாகிறது.
இந்த ஆண்டில் இரண்டாவது கட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போர்ப் பயிற்சி கோவா கடல் பகுதியில் நடக்கவுள்ளது.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பயிற்சியில் அவுஸ்ரேலியாவும் இணைந்திருப்பது சீனாவை கோபமடையச் செய்துள்ளது.
ஜப்பானுக்கு எதிராக சென்காகு தீவுகள் விவகாரத்தில் உரிமை கொண்டாடும் சீனா, அவுஸ்ரேலியாவை வர்த்தகப் போரில் மிரட்டி வருகிறது.
அத்துடன், லடாக் எல்லையில் இந்தியாவுடனும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த நான்கு நாடுகளும் ஒன்றிணைந்த போர்ப் பயிற்சியை நடத்துகின்றன.
இதேவேளை, சீன கடற்படையை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு இந்திய கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.