இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உருவெடுப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு!
In இந்தியா February 10, 2021 6:45 am GMT 0 Comments 1200 by : Krushnamoorthy Dushanthini

இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உருவெடுப்பதற்கும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அளிக்கும் சக்தியாக திகழ்வதற்கும் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price) மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் கூட்டுறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்னும் இந்திய வெளியுறவு அமைசர் ஜெய்சங்கரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மியான்மர் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் பற்றி விவாதித்ததாகவும் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.