இந்தியா- உஸ்பெகிஸ்தான் இடையேயான உச்சி மாநாட்டில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
In இந்தியா December 12, 2020 6:46 am GMT 0 Comments 1353 by : Yuganthini

இந்தியா- உஸ்பெகிஸ்தான் இடையேயான உச்சி மாநாட்டில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
காணொளி வாயிலாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி சவ்கத் மிர்சியோயேவ் கலந்து கொண்டனர்.
இதன்போது பேசிய மோடி, “இருநாடுகளும் தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
எனவே, தீவிரவாதத்தை அழிப்பதற்கு இருநாடுகளின் கூட்டு முயற்சி தொடர்ந்து தேவைப்படுகிறது” என குறிப்பிட்டார்.
இராணுவம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயற்படுவது தொடர்பாக 9 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.