இந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை – ராஜ்நாத் சிங்
In இந்தியா December 30, 2020 9:36 am GMT 0 Comments 1507 by : Varothayan

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை.
இராணுவ மட்டத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். எந்த முன்னேற்றமும் இல்லாத தற்போதைய நிலை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் படைகளை குறைக்க முடியாது’ என்றார்.
இதன்மூலம், லடாக் எல்லைகளில் இந்தியா படைகளை குறைக்காது என்பதை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தி உள்ளார். இதேபோல், சீனாவும் படைகளை குறைக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.