இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்வதற்கு வரவு- செலவுத்திட்டம் வழிவகுக்கும்- நிர்மலா சீதாராமன்
In இந்தியா February 13, 2021 6:31 am GMT 0 Comments 1195 by : Yuganthini

இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்வதற்கு மத்திய வரவு- செலவுத்திட்டம் வழிவகுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு- செலவுத்திட்டக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைகின்றது. வழக்கமாக மாலை தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது வரவு- செலவுத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் வழங்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய வரவு- செலவுத்திட்ட வழிவகுக்கும்.
வரவு- செலவுத்திட்டத்தில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு குறையவில்லை. சுகாதார ஆராய்ச்சிக்கு 2 ஆயிரம் ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று போன்ற சவாலான சமயம் கூட அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஓடவில்லை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியமானது” என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.