இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான விமானங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை!
In இந்தியா December 11, 2020 9:06 am GMT 0 Comments 1437 by : Krushnamoorthy Dushanthini

ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா – நேபாளம் இடையில் விமானங்களை இயக்க இருநாடுகளும் தீர்மானித்துள்ளன.
ஜூலை முதல் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா – நேபாளத்திற்கு இடையில் மீண்டும் விமான சேவையை துவங்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேபாளத்திற்கு இடையே ஒப்பந்தம் அடிப்படையில் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி – காத்மாண்டு இடையே ஒரு நாளுக்கு ஒரு விமானம் இயக்கப்படும். சுற்றுலா விசா இல்லாமல் முறையான இந்திய விசா வைத்திருப்போர் இந்த விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
இதேவேளை ‘வந்தே பாரத்’ திட்டத்திகீழ் கடந்த மே மாதம் முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.