இந்திய இராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மனஉறுதியை உயர்த்தியது – ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் புதிய இராணுவ மருத்துவமனை கட்டுவதற்கு நேற்று(சனிக்கிழமை) பூமி பூஜை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கவர்ந்திழுக்கும் செயல்திறன் நாட்டின் மன உறுதியை உயர்த்தி பிடிக்க உதவியது என்று குறிப்பிட்டார்.
மேலும் நாட்டு மக்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் வழிவகுத்தது என்றும், ராஜ்நாத் சிங், இந்திய இராணுவம் குறித்து குறிப்பிட்டபோது, அங்கிருந்த வீரர்கள் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.