இந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளது – ராஜ்நாத் சிங்
In இந்தியா February 22, 2021 5:36 am GMT 0 Comments 1150 by : Krushnamoorthy Dushanthini

கிழக்கு லடாக் பகுதியிலிருந்து இந்திய-சீன படைகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ள அவர், “ கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இருநாடுகளுக்கிடையில் இராணுவம் மற்றும் தூதரக நிலையில் 9 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து அந்தப் பகுதியிலிருந்து இருநாட்டு படைகளையும் வாபஸ் பெறும் நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
எல்லைப் பகுதிகளைப் பொருத்தவரையில் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கைகளையும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அதுபோன்ற முயற்சிகளை என்ன விலை கொடுத்தேனும் அரசு தடுத்து நிறுத்தும்.
இந்திய இராணுவத்தின் துணிச்சலை காங்கிரஸ் சந்தேகக் கண் கொண்டு பாா்ப்பது துரதிருஷ்டவசமானது. இது நமது வீரா்களின் போற்றத் தகுந்த தியாகத்தை அவமதிப்பதாக இல்லையா?.
இந்தியாவின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் எந்த செயலிலும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்தாண்டு நடைபெற்ற மோதலில் இந்திய இராணுவத்தைச் சோ்ந்த 20 வீரா்கள் உயிரிழந்தனா். அதேபோன்று சீனாவின் தரப்பிலும் பலா் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.