இந்திய நாடாளுமன்ற தேர்தல் – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்!
In இந்தியா April 29, 2019 3:10 am GMT 0 Comments 2301 by : Krushnamoorthy Dushanthini
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் 4ஆம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதன்படி 9 மாநிலங்களுக்கான 72 தொகுதிகளில் இத்தேர்தல் இடம்பெறுகிறது.
பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலேயே இத்தேர்தல் நடைபெறுகின்றது.
இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 945 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அத்துடன் 12 கோடியே 80 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அதேவேளை, 1 இலட்சத்து 40 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை பொருத்தவரையில் மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளாவும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டியும் களத்திலுள்ளனர். அத்துடன் பீகாரில் பாரதிய ஜனதா தளம் சார்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஒடிசா சட்டசபையின் 42 தொகுதிகளுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகின்றது.
அத்துடன் குறித்த பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா