இந்த ஆண்டும் பொதுமக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்!
In ஆசிரியர் தெரிவு January 4, 2021 8:06 am GMT 0 Comments 1647 by : Jeyachandran Vithushan

இந்த ஆண்டும் பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நிபந்தனைகளுக்கு ஏற்பவும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள புதிய சிறுநீரக மருத்துவமனைக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு 60 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சோதனைகளுக்கு தேவையான நிதியைப் பெற, நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.