இந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை
In இலங்கை January 4, 2021 3:13 am GMT 0 Comments 1569 by : Dhackshala

நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு, மன்னார், மற்றும் மோனராகலை ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தொற்றார்கள் பதிவாகியுள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 403 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான தொற்றாலாளர்கள் கம்ஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் 77 பேர் நீர்கொழும்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளனர். அத்தோடு பல்லன்ஹேன சிறைச்சாலையில் 71 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் இவர்களுள் 5 பெண் சிறைக்கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 96 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 47 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்று உறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 31 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 37 ஆயிரத்து 252 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 309 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன், இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 213 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.