ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
In இங்கிலாந்து May 1, 2019 11:19 am GMT 0 Comments 2612 by : shiyani

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்-இன் வழக்கு இன்று லண்டன் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து மெற்றோபொலிற்ரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்காக சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த அசாஞ் அரசியல் தஞ்சம் கோரி ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைந்தார்.
இந்நிலையில் அசாஞ்சின் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை ஈக்குவடோர் அரசால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூதரகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அசாஞ் கைதுசெய்யப்பட்டார்.
எனது வழக்கை பின்பற்றிய முறையின் மூலமாக எவரையேனும் மதிக்காமலிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்த சமயங்களில் நான் மிகவும் அச்சமடைந்திருந்தேன், அதனால் எனக்கு எது சிறந்தது என தோன்றியதோ அதையே நான் செய்தேன் என அசாஞ் இன்று நீதிமன்றில் சமர்ப்பித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ்-க்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.