இப்போது தனியாக….
May 26, 2018 5:15 pm GMT
நன்றாகவே சிக்கிக் கொண்டேன்…
நல்லதோர் ஓர் மாய வலையில்…..
மெய்யெது பொய்யெது தெரியா…
புதிர் வலையது…… ஆனாலும் ஓர்
ஒளிக்கற்றை மீதோர் பற்று….
திரைக்குப் பின்னால் தெரியும்…
போலியான மறு உருவங்கள்…
அச்சத்தை மட்டுமல்ல கூடவே….
அறுவருப்பையும் பரிசளிக்கின்றது…
பூஞ்சியம் சூன்யமாகின்றது…
இரண்டுமே வட்டம் என்பதால்… எதையொதுக்க??
அறியாத ஒருவருக்கு இரையாகும்…
தூண்டில் மீனா வாழ்க்கை??…
வெள்ளைப் பக்கமாக, ஒரு பக்கமாக…
இருந்து விட்டுப் போகட்டும் என் வாழ்க்கை….
கலக்கமில்லை.. நடுக்கமுமில்லை…
ஆனால் அடுத்த பக்கங்களை…
நிரப்பியாக வேண்டும் கட்டாயம்..
இடியாப்பச் சிக்கல் வாழ்வை…
நேர்த்தியாக பிரித்து வட்டமாக்கினேன்…
அப்போதும் சரியாக சூழலவில்லை….
என் வெற்றுப்பக்கச் சக்கரம்…
கேள்விகளும் கேலியும்….
முதுகில் ஏறிய சனியான தொடரும் போதும்…
இருள் மிக்க ஓர் பயணத்தைக்…
கடக்க பற்றுதலாய் ஓர் சுடர் கிடைத்தது…
அச் சுடரும் விட்டு விட்டு ஒளி வீச…
சில இடங்களில் வீழ்ச்சி…
வீழ்ந்த போது வலியில்லை….
எழ வேண்டும் என்பதனால்…
விட்டு விட்டு வீசும் அச்சுடரைப்….
பற்றிக் கொண்டிருக்கின்றேன்..
வெள்ளைப்பக்கத்திற்கு ஓர் கவி….
வடிக்க அச்சுடர் ஒளி தருமா?
அல்லது நடந்து செல்லும் பாதையில்…..
இடைநடுவில் கைவிட்டு ….
அனர்த்த இருளை கண்முன் காட்டுமா??
தொற்றிக் கொண்டிருப்பதை விட
பற்றிக் கொண்டிருப்பதே மேல்….
அந்தப் பற்றுதல் மீது கொண்ட நேசத்தால்..
அதனால் தொடர்கிறேன் ஓர் பாதையில்….
இப்போது தனியாக…..
-
என்ன தேடுகின்றாய்…
வண்ணத்துப் பூச்சியே நித்தமும் சுழன்று சுழன்று என்ன...
-
யாசகன்
மௌனத்துக்கு அனுமதியில்லை எனக்கும் அவளுக்குமான பயணங...