இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது: மனோபாலா கோரிக்கை
In சினிமா April 9, 2019 7:38 am GMT 0 Comments 1989 by : adminsrilanka

மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருதொன்றை உருவாக்கி தகுதியான இயக்குநருக்கு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு இயக்குநர் மனோபாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உருவ பட திறப்பு விழா நேற்று (திங்கட்கிழமை) சென்னை திரைப்பட இயக்குநர் நல சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பேரரசு, மனோபாலா, மனோஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் தமிழ்நாடு இயக்குநர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இயக்குநர் மனோபாலா, “இயக்குநர் மகேந்திரன் பெயரில் தமிழக அரசு விருதை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி கடந்த 2ஆம் திகதி தனது 79ஆவது வயதில் காலமானார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எத
-
கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மான