இரகசிய தகவலையடுத்து யாழில் விசேட சுற்றிவளைப்பு!
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த வீடு சுற்றிவளைப்பட்டுள்ளது.
நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் வீட்டுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கூரிய வாள் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த வாள் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்ட
-
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்