ரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ள இளவரசர் வில்லியம்
In இங்கிலாந்து April 8, 2019 5:42 am GMT 0 Comments 2287 by : Benitlas
பிரித்தானிய இளவரசர் வில்லியம் கடந்த 3 வாரங்களாக பிரித்தானிய ரகசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரண்மனை நிர்வாகம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இளவரசர் வில்லியம் முதல் வாரம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு MI6-ல் பணியாற்றியுள்ளார்.
அங்கு, உலகம் முழுவதிமுள்ள பிரித்தானிய உளவாளிகள் தகவல்களை சேகரித்து, நாட்டின் நலன்களை மேம்படுத்துவதை பற்றி தெரிந்துகொண்டுள்ளார்.
மேலும், பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் குறித்தும் அறிந்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது வாரம் உள்நாட்டு புலனாய்வு சேவை MI5-ல், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் எப்படி விசாரணை மேற்கொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக சென்றுள்ளார்.
மூன்றாவது வாரம் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ-ல், அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, பகுப்பாய்வு செய்வதற்கும், தடை செய்வதற்கும், தொழில்நுட்ப நுணுக்கம் பற்றியும் கற்றறிந்துள்ளார்.
இந்தநிலையில் இவரது மூன்று வார பணியானது கடந்த சனிக்கிழமையுடன் நிறைவிற்கு வந்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளஇளவரசர் வில்லியம், ‘பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புக்களில் நேரத்தை செலவிடுவது, நமது தேசிய பாதுகாப்பிற்கு அவர்கள் செய்யும் முக்கிய பங்களிப்பைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளுதல், உண்மையிலேயே தாழ்மையுள்ள அனுபவம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.