இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி!
In கிாிக்கட் November 29, 2020 12:14 pm GMT 0 Comments 1678 by : Jeyachandran Vithushan

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
சிட்னியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டேவிட் வோர்னர் 83 ஓட்டங்களையும் ஆரோன் பின்ச் 60 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 104 ஓட்டங்களையும் லபுசாக்கே 70 ஓட்டங்களையும் அதிரடியாக விளையாடிய மக்ஸ்வெல் 63 ஓட்டங்களையும் எடுக்க 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 389 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி, பும்ரா மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 50 ஓவர்கள் நிறைவில் ஓட்டங்களை மாத்திரமே பெற்று 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அவ்வணி சார்பாக அணித்தலைவர் விராட் கோலி 89 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் சம்பா மற்றும் ஹசில்வுட் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர