இராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு
In இலங்கை January 17, 2021 6:03 am GMT 0 Comments 1404 by : Dhackshala

இராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இருவரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரின் சடலத்தை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.