இராணுவ ஆட்சியாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

சூடானில் இராணுவ ஆட்சியாளர்கள் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளமையினை ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவேற்றுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி கடும் எதிர்ப்புகள் காரணமாக ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் 10 பேர் கொண்ட இராணுவ ஆட்சிக் குழு நியமிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் புதிதாக அமையவுள்ள மக்கள் மற்றும் இராணுவம் இணைந்த ஆட்சிக் குழுவானது 10 பேர் கொண்ட இராணுவ ஆட்சிக் குழுவிற்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், ‘பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆட்சிக் குழுவை அமைப்பதற்காகவும் மக்களாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் நாம் காத்திருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் அடிப்படைக் கோரிக்கையான நாளாந்த நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான புதிய மக்களாட்சியை ஏற்படுத்தும் வரை அனைத்து அரசாங்க நடவடிக்கைகளையும் இந்த புதிய ஆட்சிக் குழு முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, மக்கள் நிர்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் வரை தமது முற்றுகைப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.