இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி
In இந்தியா November 14, 2020 7:41 am GMT 0 Comments 1484 by : Yuganthini

இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு.
மக்களுடைய அன்பையும் வாழ்த்தையும் உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். இராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான், எனக்கு மன நிறைவாக இருக்கிறது.
பனிமலையோ பாலைவனமோ இராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி. உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இரு மடங்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
130 கோடி இந்தியர்களும் உங்களுடன் நிற்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் நம் வீரர்களின் வலிமை மற்றும் வீரம் குறித்து பெருமைப்படுகிறான்.
நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் இருந்து நமது துணிச்சலான வீரர்களை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.