இரு குழந்தைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய தாய் – தம்புள்ளையில் சம்பவம்!
In இலங்கை February 16, 2021 11:25 am GMT 0 Comments 1227 by : Dhackshala

தம்புள்ளை – யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த தாய் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தாயும் இரண்டு குழந்தைகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான வீதியோரத்தில் இவர்கள் கீழே விழுந்திருந்த நிலையில் காணப்பட்டபோது பிரதேசவாசிகள் கண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த யுவதியின் கணவன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் செய்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.