இரு தரப்பு உறவை உயரத்திற்கு கொண்டு செல்வோம் : ஜோ பைடனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!
In இந்தியா January 21, 2021 7:11 am GMT 0 Comments 1294 by : Krushnamoorthy Dushanthini

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன்.
உலகின் பொதுவான சவால்களை ஒருங்கிணைந்து போராடி, உலகில் அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டுவோம். பொருளாதாரம் உட்பட இருதரப்பு உறவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.